விவேக் கர்வா, நிதி முதலீடு ஆலோசகர்
இந்தியா விவசயாத்தை நம்பிய நாடாகவே பல காலம் இருந்துவந்தது.. உலக வரைபடத்தில் இந்தியா என்னும் நாடு தன்னுடைய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்தது.. தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது..கால ஓட்டத்தில், கடந்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ஒரு தலை சிறந்த நாடாக இந்தியா வளர்ந்துவிட்டது. உலகமே அஞ்சும் அமெரிக்கா கூட இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு அஞ்சுகிறது.. அமெரிக்க அதிபர் ஒபாமாவே தன்னுடைய தேசத்து குழந்தைகளிடம் சொன்ன ஒரு தகவல் – "இந்த தொழில்நுட்பத் துறையில் நீங்கள் சிறந்து விளங்கவில்லை என்றால், இந்திய இளைஞர் உன்னுடைய வேலையை தட்டி சென்றுவிடுவார், விழித்துக்கொள்!"
கடந்த 20 வருடங்களாக இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு IT துறை முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த அசுர வளர்ச்சியின் காரணமாக IT துறையில் வேலைக்கு சேரும் பலரும் அதிக சம்பளம் பெற்ற கதை ஊர் அறிந்த விஷயம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை IT படிக்க வைத்து, அதிக சம்பளம் பெற வேண்டும் என்று விரும்பினர்.. தங்களுடைய பனிக்காலத்தின் இறுதியில் பார்த்த சம்பளத்தை தன்னுடைய மகனோ/மகளோ வேலைக்கு சேரும்போதே பெற்றதை எண்ணி பெருமைப்பட்டனர்..
இதன் விளைவாக ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி செலவுகளும் அதிகரித்தன. Smartphone , கார் என EMI-களால் வாங்கினர்.. இன்னும் சிலர் வீடு(கள்) என்ன விலையாக இருந்தாலும் கவலைப்படாமல் EMI க்கு அடிமையாகி EMI -யை மணந்தனர். சிலருக்கு வந்த பணம் எங்கே போனதென்றே தெரிவதில்லை. காரணம் : அதிக சம்பளம் – தேவையற்ற செலவுகள்..
ஆனால் எதுவும் நிலை இல்லாத இன்றைய சூழலில், எத்தனை IT வல்லுனர்கள் தங்களுடைய எதிர்காலத்துக்காக சேமித்துள்ளனர்? வெகு சிலரே இதன் தேவையை உணர்ந்துள்ளனர்..அவ்வாறு உணர்ந்த மக்களும் தவறான முதலீடுகளை செய்துள்ளனர். வரி சேமிப்பு என்ற கண்ணோட்டத்துடன் தவறான முதலீடுகளை செய்து சிக்கிக்கொண்டு அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்கத்தை ஒட்டியே உள்ளது என்பதை தாமதமாகவே உணர்கின்றனர்..
நிதித் திட்டமிடல் என்பது அனைவருக்கும் ஆவசியம். IT துறையில் பணிபுரிவோருக்கு மிகவும் அவசியம்.. ஏன்?
1) மன அழுத்தம் அதிகம் உள்ள தொழில் : IT துறையில் பணிபுரிவோர் பெரும்பாலும் கால நேரம் பார்க்காமல் வேலை செய்யும் சூழல் உள்ளது.. அதோடு TOUGH TARGETS,TIGHT DEADLINES என்பதன் காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கபடுகின்றனர்..எத்தனை காலத்திற்கு இந்த மன அழுத்தத்தை தாங்கிக்கொண்டு வேலை செய்ய முடியும்?
2) 21 வயதில் IT துறையில் நுழையும் ஒரு பொறியாளர் 60 வயது வரை இந்த தொழிலில் வேலை செய்ய முடியும் என்ற உத்தரவாதம் உண்டா?
IT துறையில் இருந்த அசுர வளர்ச்சி இன்று சராசரியாக 10-15% ஒட்டியே உள்ளது. சம்பள உயர்வு என்பதும் 10% க்கு குறைவாகவே உள்ளது.. IT வரலாற்றில் நாம் பார்த்த அசுர வளர்ச்சி தொடருமா என்பது கேள்விக்குறியே!
நிம்மதியான ஒய்வுகாலத்துக்கும், குடும்பத்தின் வருங்கால தேவைகளுக்கும் சரியான நிதித் திட்டமிடல் என்பது IT துறை பணியாளர்களுக்கு மிகவும் அவசியம்.. இது வரை செய்யாமல் இருந்தாலும் தவறில்லை.. உடனடியாக உங்கள் குடும்பத்துக்கான நிதித் திட்டமிடலை செய்துகொள்ளுங்கள்!
English Version: https://vridhi.co.in/2015/07/19/techie-hope-you-are-financially-planned/
Please share this Article with your Friends, Relatives and Colleague’s for their benefits… To contact us Click Here
***
Financial Planning for Information Technology Employees, Financial Planning for IT Employees, Investment Advice for IT Employees, Tax Saving for IT Employees, Job Offers in IT Sector, Opportunities in IT Sector, Layoffs in IT Sector in India, Fee Based Top Best List Certified Financial Planners Chennai Bengaluru India Certified International Wealth Management Advisors Companies in Chennai Bengaluru India Stock Market Mutual Funds Tax Saving ELSS Consultants Advisors Brokers Agents Managers in Chennai India Vridhi Vivek Karwa Investment Advisors Consultants Chennai Executive Financial Planner Jobs Stock Market Finance and Mutual Fund Distribution Tax Planning Certified SEBI Registered Personal Investment Advisers Planners in Chennai India Rakesh Jhunjhunwala Portfolio, Financial Planning Presentations, Stock Market Tips, MarketFastFood Market Fast Food Money Advisors In Chennai India Financial Planners in Chennai India Financial Planning Companies in Chennai India Money Advisers in Chennai India Mutual Funds Advisors in Chennai India Investment Advisory Chennai Bengaluru India Systematic Investment Plan Mutual Fund SIP Mutual Fund ELSS Tax Saving Scheme, Good Speakers and Trainers in Chennai